அச்சு, இலத்­தி­ர­னியல் மற்றும் இணை­யத்­தள நிறு­வ­னங்­களின் ஊடாக நிய­மிக்­கப்­பட்டு, நாட­ளா­வி­ய ­ரீ­தியில் செய்­திகள் சேக­ரிக்கும் சகல பிர­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கும் தற்­போது 2018 ஆம் ஆண்­டுக்­கான சிறப்பு ஊடக அடை­யாள அட்­டைகள் வழங்­கப்­பட்டு வரு­வ­தாக அர­சாங்க தகவல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

ஊடக மற்றும் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் கருத்­திட்­டத்­திற்கு அமை­வாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள இச்­சி­றப்பு நட­வ­டிக்கை, அனைத்து பிர­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளையும் கெள­ர­வப்­ப­டுத்தும் நோக்கில், மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக, தகவல் திணைக்­க­ளத்தின் பதில் பணிப்­பாளர் நாயகம் சுதர்­சன குண­வர்­தன தெரி­வித்­துள்ளார்.

இது­வரை காலமும் அச்­சக, இலத்­தி­ர­னியல், இணை­யத்­தள ஊடக நிறு­வ­னங்­களில் கடமை புரியும் அலு­வ­லக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு ‘ஊட­க­வி­ய­லாளர்’ என்றும், பிர­தேச ரீதி­யாக செய்­தி­களைச் சேக­ரிக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு ‘பிர­தேச ஊட­க­வி­ய­லாளர்’ என்றும் மாத்­தி­ரமே தகவல் திணைக்­க­ளத்­தினால் ஊடக அடை­யாள அட்­டைகள் வழங்­கப்­பட்டு வந்­தன.

ஆனால், பிர­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு மதிப்­ப­ளித்து, அவர்­க­ளையும் கெள­ர­வப்­ப­டுத்தும் நோக்கில் எவ்­வித வேறு­பா­டு­க­ளு­மின்றி, இச்­சி­றப்பு ஊடக அடை­யாள அட்­டைகள் தற்­போது விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

பிர­தேச ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு 2018 ஆம் ஆண்­டுக்­கான சிறப்பு அடை­யாள அட்­டைகள் விநி­யோ­கிக்கும் நட­வ­டிக்­கைகள், தற்போது திணைக்­க­ளத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருப்­பதால், பிர­தேச ஊடக­வி­ய­லா­ளர்கள் தாம் சேவை­யாற்றும் அச்சு, இலத்­தி­ர­னியல் அல்­லது இணை­யத்­தளம் ஆகி­ய­வற்றின் ஏதா­வது ஒரு ஊடக நிறு­வ­னத்தின் ஆசி­ரியர் ஊடாக அத்­தாட்­சிப்­ப­டுத்­தப்­பட்டு நிரூ­பிக்­கப்­பட்ட விண்­ணப்பம் ஒன்­றினை தகவல் திணைக்­க­ளத்­திற்கு சமர்ப்­பிப்­பதன் மூலம், சிறப்பு ஊடக அடை­யாள அட்­டை­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்றும் அவர் தெரி­வித்­துள்ளார்.

ஒருவர் எத்­தனை ஊடக நிறு­வ­னங்­களின் கீழ் செய்­திகள் சேக­ரித்­தாலும், ஒருவருக்கு ஏதாவதொரு ஊடக நிறுவனத்தின் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களை நேரில் கொண்டுவந்து கையளிக்கவோ அல்லது, பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்பிவைக்க முடியும் என்றும் பிரதேச ஊடகவியலாளர்கள் தகவல் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.