இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டையினை பெற்றுக்கொடுப்பதற்கான விசேட ஒருநாள் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

மாணவர்களுக்கான 3 லட்சம் அடையாள அட்டைகளை இதுவரையில் திணைக்களம் பெற்றுக்கொடுத்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை தேசிய அடையாள அட்டை கிடைக்காத மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு எதிர்வரும் 25ஆம் திகதி பத்தரமுல்லை இசுஹூருபாயவில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தில் இடம்பெறும் விசேட வேலைத்திட்டத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தேசிய அடையாள அட்டைகளில் பிழைகள் உள்ள மாணவர்கள் தமது அடையாள அட்டைகளை திருத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

tamilwin