களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் விசேட தேவையுடைய பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேகத்தின் பேரில்  சந்தேகிக்கப்படும் நபர் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று பகல் கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த 32 வயதுடைய வாய்பேசமுடியாத விசேட தேவையுடைய பெண் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்தது.
குறித்த வீட்டில் தாயும் மகளும் இருந்துவந்த நிலையில் தாய் மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்தவேளையில் குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் இருந்த 52வயதுடைய நபர் குறித்த பெண்ணை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பில் குறித்த நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு குற்ற தடவியல் பொலிஸ் பிரிவின் மாவட்ட பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் இது  தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.