சந்தர்ப்பவாதிகள் தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்காக இனவாதம் மற்றும் மதவாதத்தை நாட்டில் ஏற்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அத்தனகல்ல கஹடோட்டவிட்ட அல்பத்ரியா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்த்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு சில வங்குரோத்து அரசியல்வாதிகள் தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்காக உருவாக்கும் சிறிய விடயங்களுக்கு நாங்கள் ஆதரவளிக்காமல் அவற்றை தடுப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

குவைத் அரசாங்கத்தின் நிதியுதவியில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை கோடி ரூபா இதற்காக செலவிடப்பட்டுள்ளது. இவ்வைபவத்தில் குவைத் தூதுவர் கலாப் பூ பூடர் மற்றும் பிரதேச அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.