-துறையூர் தாஸன்.

மாங்காடு இந்துமாமன்றம்,தென் மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்,கிராம அபிவிருத்தி,கலாசார கலை விவகாரம்,நலன்புரி,நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புச் சேவை,மகளிர் விவகாரம் மற்றும் கட்டிட பொருளாதார மேம்பாடு, வீடுகள் மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சுடன் இணைந்து கிழக்கு மற்றும் தென் மாகாண இளைஞர் யுவதிகளுக்கிடையிலான விளையாட்டு,சுற்றுலா,கலை கலாசார விழா,தென் மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார,கலை கலாசார விவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் கே.எச்.எல்.பிரியந்த தலைமையில் மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில், இன்று(12) இடம்பெறவுள்ளது.

காலி திவித்துரை விவேகானந்தா தமிழ் வித்தியாலய அதிபர் இரா.சிறிகிருஷ்ணனின் இணைப்பாக்கத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில்,மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்ற பேரவைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாண இந்துசமய கலாசார மேம்பாட்டு மேற்பார்வையாளரும் கிழக்கு மாகாண,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஞா.கிருஸ்ணப்பிள்ளை,களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் ஆகியோர்  பிரதம அதிதிகளாகவும் பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன்,களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை,வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன்,களுவாஞ்சிக்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி ஜெ.பீ.குணவர்த்தன,மட்டக்களப்பு இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் ஏ.அமீர்,புதுக்குடியிருப்பு ஆயுர்வேத வைத்தியசாலை, ஆயுர்வேத வைத்தியர் டாக்டர் வீ.கே.இராசநகம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.