(டினேஸ்)

30 வருட கால போராட்டம் முடிவடைந்து பல வருடம் சென்றாலும் என்றும் மனதில் மாறாத வடுக்களாக அமைவது கிரான் தரவை மாவீரர் துயிலுமில்ல பிரதேசங்கள். என்கின்றார் குடுமிமலை மயிலன்.

(15) தமிழ் தேசிய சனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக்கிளையின் ஏற்பாட்டில் தரவை மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு செயற்பாட்டுக் குழுவினரினால் முன்னெடுக்கப்பட்ட துயிலுமில்ல சிரமதானப்பணியின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…

காலத்தால் அழியாத கல்லறை மாவீரர் கல்லறைகள் என மாவீரர்களது வரலாறும் துயிலுமில்லத்தில் உள்ள கல்லறைகள் பற்றிய சிறப்புக்கள் பாடல்களாக உள்ளன அந்தவகையில் இவ்வருடத்திற்கான மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் தரைவைத் துயிலுமில்லத்தில் அகவணக்கத்துடன் பொதுமக்களினாலும் மாவீரர் குடும்ப உறவுகளினாலும் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட உள்ளது.

அதன் ஒரு அம்சமாக இறுதிக்கட்ட சிரமதானப்பணிகள்  நடைபெறுகின்றது. இதன் பின்னர் கார்த்திகை 27 மாவீரர் நாளிற்கான துயிலுமில்ல சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதுடன் அன்றைய தினம் தமது உயிர் நீத்த உறவுகளுக்கான அகவணக்கத்தை செலுத்துவதற்கு மாவீரர் குடும்பத்தினர் முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகிய அனைவரையும் அழைக்கின்றோம் ஏற்பாட்டுக்குழுவினர் என அவர் கருத்துத் தொரிவித்தார்.