(காரைதீவு  நிருபர் சகா)

இலங்கை கால்நடை உற்பத்தி மற்றும்  சுகாதாரசேவையில் தரம்3 பதவியில் காணப்படும் நிலவும் 112  வெற்றிடங்களை நிரப்புவதற்கான  விண்ணப்பத்தை  அரசசேவைஆணைக்குழு கோரியுள்ளது.
இதற்கு கால்நடை மருத்துவ விஞ்ஞானப்பட்டதாரிகள்  விண்ணப்பிக்கமுடியும். விண்ணப்ப முடிவுத்திகதி 05.12.2017 ஆகும்.
110வீத விண்ணப்பதாரிகள் இதற்காக நடாத்தப்படும் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டு திறமை அடிப்படையில் இப்பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என கிராமிய பொருளாதாரம் பற்றி  அமைச்சின் செயலாளர் எஸ்.சேனநாயக்க தெரிவித்தார்.
விண்ணப்பப்படிவங்கள் யாவும் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்பதாக பதிவுத்தபாலில் பணிப்பாளர் நாயகம் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் த.பெ.இல.13   கெட்டம்பே பேராதனை எனும் விலாசத்திற்கு அனுப்பிவைக்கவேண்டுமென விண்ணப்பதாரிகள் கேட்கப்பட்டுள்ளனர்.
விண்ணப்பிக்கும் இறுதித்தினத்தன்று  21-35வயதிற்கு இடைப்பட்டவராக இருத்தலவசியம்.
இது தொடர்பான மேலதிக விளம்பரங்களை 17.11.2017 அரச வர்த்தமானியில் பெறலாம்.