முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.இராஜேஸ்வரன் அவர்கள் தனது 2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு கதிரைகள் கொள்வனவுக்காக நிதி ஒதுக்கியிருந்தார்.

அந்நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட கதிரைகளினை நேற்றையதினம் (10.11.2017) முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பாடசாலை அதிபரிடம் கையளித்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கி.ஜெயசிறில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.