அன்பார்ந்த மாணவர்களே பெற்றோர்களின் கனவுகளை நனவாக்குங்கள் இதுவே உங்களின் குறிக்கோளாக அமையவேண்டும் இன்று இலங்கையின்; கல்வியில் நாங்கள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் எமது சமூகத்தின் தலைவிதியை மாற்றியமைக்க உங்களால் மாத்திரமே முடியும்  என கிழக்கு மாகாண முன்னாள் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்
?
பாடசாலை சமூகத்தின் கோரிக்கைக்கு அமைய பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாத்திற்கு அதிபர் பிரதி அதிபர்களுக்கான தளபாடங்களை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக பெற்றுக்கொடுத்து அதனை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
?
பாடசாலை அதிபர் எஸ்.உதயகுமார் தலைமையில் இன்று (10) வெள்ளிக்கிழமைநடைபெற்ற இந்நகிழ்வில்  அவர் மேலும் தெரிவித்தாவது:
கல்வியில் எங்களை திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதனால்தான் எமது இளைஞர்கள் ஆயுதமேந்தினர் சுதந்திரத்திற்கு முன்னர் எங்களுடைய தமிழர்களே அனைத்து திணைக்களகங்களிலும் தலைமை பதவியினை வகித்து வந்தனர் இதனை கட்டுப்படுத்தவேண்டும் என்றதன் அடிப்படையில்தான் தமிழ் மக்கள் வாழுகின்ற மாவட்டங்களில் பல்கலைக் கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை அதிகரித்தனர். இதனால் எமது மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதன் எண்ணிக்கை குறைத்திருந்தது. இதனால்தான் எமது இளைஞர்கள் அவ்வாறானதோர் நிலைக்கு தள்ளப்பட்டனர்  அதுமாத்திரமின்றி இன்று நாங்கள் கல்வியில் நிருவாக ரீதியாக பின்னடைவுகண்டுள்ளோம்.
ஆனால் தேனையான விடையம் இவ்வவாறான  இடைவெளியை பயன்படுத்தி மற்றைய இனங்கள் கல்வியில் எங்களை முந்தி கொண்டு சென்றுள்ளது. இன்று இலங்கையின் கல்வி நிலையினை எடுத்துப்பார்தால் கிழக்கு மாகாணம்  ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றது. அதிலும் எமது தமிழ் பிரதேச மாணவர்களின் கல்வி நிலையில் மிகவும் பின்தங்கி காணப்படுகின்றது. இது மிகவும் துரதிஷ்ரவசமான விடயமாகும்.   இதனை மாணவர்கள் கருத்திலெடுத்து மாற்றியமைக்க வேண்டும்
?
இப்பாடசாலை தேசியமட்டத்தில் பேசப்படுகின்ற ஒரு பாடசாலையாக காணப்படுகின்றது. இந்த பெயரை எமது சமூகத்திற்கு ஈட்டி கொடுத்த மாவணர்கள் இதற்காக பாடுபட்ட அதிபர்ஆசிரியர்  அனைரையும் நான் பாராட்டுகின்றேன்  எதிர்காலத்தில் எமது சமூகத்தினை பாதுகாக்கவேண்டியதன் பொறுப்பு உங்களிடம் மாத்திரமே காணப்படுகின்றது இதனை நீங்கள் நிறைவேற்றுபவர்களாக மாறவேண்டும்.
உங்களால் மாத்திரமே எமது சமூகத்தின் எதிர்கால தலைவியை மாற்றியமைக்க முடியும் எனவேதான் அன்பார்ந்த மாணவர்களே உங்களின் பெற்றோர்களின் கனவுகளை நனவாக்குங்கள் என அவர் தெரிவித்தார்.
(காரைதீவு  நிருபர் சகா)