(காரைதீவு நிருபர் சகா)
கல்முனை மாநகரசபைக் குட்பட்ட பிரதேசத்தில் ‘ நான்கு உள்ளூராட்சி சபைகளை’ உருவாக்கி இனங்களிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில்நேற்று வெள்ளிக்கிழமை உள்ளூராட்சி மாகாண சபைகள். அமைச்சில் உயர்மட்ட கூட்டமொன்று இடம்பெற்றது.

உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஷர் முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இக் குறிப்பிடப்படும் இவ்வுயர் மட்டக்கூட் டத்தில் ‘கல்முனை மாநகரசபை பிரதேசத் தின் பிரிப்பு’ தொடர்பில் கல்முனை சாய்ந்தமருது விவகாரங்கள் பலவும் நன்கு அலசி ஆராயப்பட்டு இறுதியில் மூன்று முஸ்லிம் பெரும்பான்மை சபைகளையும் ஒரு தமிழ் பெரும்பான்மை சபையினையும்
கொண்டதான நான்கு உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவது எனவும் கொள்கையளவில் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வுயர் மட்டக் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தேசிய காங்கிரஸ் தலை வரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அஸாத் சாலி ஆகியோரும்தமிழ் தேசிய கூட்டமைப்புப் பிரதிநிதிகளான எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மாவை சேனாதிராஜா கோடீஸ்வரன்
கென்றி மகேந்திரன் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.

மேலும் குறித்த இந்நான்கு சபைகளும் கடந்த 1987 காலப்பகுதிக்கு முன்பிருந்த சபைகளின் எல்லைகளுடன் ஏற்படுத்தப்பட வேண்டும்எனவும் இவ்வெல்லைகள்எந்த
அரசியல்வாதிகளாலும் உருவாக்கப்பட்டது அல்ல அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாலேயே வகுக்கப்பட்டன என்பதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் .பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

ஆனால் அதற்கு நாம் சம்மதிக்கப்பபோவதில்லையென ஹென்றிமகேந்திரன் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். 1987இற்கு முன்பிருந்த முறையில் பிரிப்பதற்கு தமிழ்மக்கள் ஒருபோதும் உடன்படமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். முழுமையான தமிழ்மக்களைக்கொண்ட முழுமையான தமிழ்ப்பிரதேசங்கள் அனைத்துமுள்ளடங்கிய கல்முனை நகரசபையொன்றே எமக்குத்தரப்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தே.கா.தலைவர்ஏ..எல்எம்.அதாஉல்லா இப்பிரிப்பு தொடர்பில்முன்னர் தான் மேற்கொண்ட முயற்சிகள்பற்றியும்  நான்காகப் பிரிப்பதுவே தனது விருப்பமும் என
முழு ஆதரவினையும் தெரிவித்து அங்கு பேசியிருக்கிறார்.

அத்தோடு முஸ்லிம் தமிழ் பிரதேசங்களின் தற்போதைய புதிய எல்லைகள் தொடர்பான கோரிக்கைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டதோடு முஸ்லிம்கள் தரப்பில் ஐந்து பிரதிநிதிகளும் தமிழர்கள் தரப்பில் ஐந்து பிரதிநிதிகளும்கொண்ட குழுக்களூடாக
தொடர்ந்தும் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் எனக்
குறிப்பிட்டது.

அடுத்த தமிழ் முஸ்லிம் தலைவர்களது உயர்மட்டச்சந்திப்பு எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அவரது அலுவலகத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை சந்திப்பது என்றும் தீர்மானமாகியது.
ஜவர்கொண்டகுழு

அதனிடையில் இருதரப்பிலுமிருந்து தெரிவாகும் ஜவர் கொண்ட குழுக்கள் நியமிக்கப்பட்டுவருகின்றது.
தமிழர்தரப்பிலிருந்து தெரிவான ஜவர்கொண்டகுழுவின் விபரம் வருமாறு:

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி. மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் ரெலோ கட்சியின் உபதலைவரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான ஹென்றிமகேந்திரன் மற்றும் ஒருபிரமுகரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாக அறியவருகின்றது.