(துறையூர் தாஸன்)

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று ரயர் வெடித்ததனால்,பாதையை விட்டு விலகி பலத்த சேதங்களுடன் வீதியோரத்தில் வீசப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில்,குருக்கள் மடத்திலிருந்து  கடைகளுக்கு விற்பனை முகவர்களால் மென்பானம் மற்றும் சோடா விற்பனை செய்துகொண்டு வந்த சிறிய ரக டிப்பர் வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை மீறி,சக்கரம் வெடித்து காற்று போதாமையினால் நேற்று நண்பகல் வேளை(13) தடம்புரண்டுள்ளது.

இச்சம்பவத்தில் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதுடன் வாகனத்தினுள் இருந்த சுமார் ,ரூபா ஒரு லெட்சத்துக்கும் மேற்பட்ட மென்பானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.