கல்முனை பிரதேசத்தில் தற்பொழுது சுனாமி பதற்ற நிலை காணப்படுகிறது.

கல்முனை கரையோர பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் சுனாமி அச்சம் காரணமாக தங்களது வீடுகளில் இருந்து வெளியேறிய வண்ணம் இருக்கின்றனர். சில பாடசாலைகளும் கலைக்கப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் பெற்றோல் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு நெருக்கடித்தன்மை காணப்படுகிறது.

கல்முனையை அண்டிய பல இடங்களில் திடீரென கிணறுகள் வற்றி நீர் மட்டம் குறைந்த காரணத்தினாலே மக்கள் இவ்வாறு அச்சமைந்துள்ளனர்.

கடல் நீர், கிணறுகளில் நீர் மட்டம் சிறிதளவு குறைந்தது ஆனால் அது சாதாரண பருவகால மாற்றத்தினால் ஏற்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பு – சுனாமிக்கான எந்தவொரு ஏதுநிலையும் இப்போதைக்கு இல்லை. அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு.

-செளவியதாசன்