உலக கதிரியக்க தினத்தை முன்னிட்டு கதிரியக்கவியல்  நிபுணர் வைத்தியர் எஸ் டிலக்குமார் (consultant Radiology) அவர்களினால் சிறப்பு விரிவுரை கல்முனை ஆதாரவைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

 

 

இவ்விரிவுரையில் தேவையற்ற xray , scan மூலம் ஏற்படும் பிறவிளைவு தாக்கங்கள் பற்றியும், இருப்பினும் xray scan  எவ்வாறான சந்தர்ப்பங்களில் அவசியமாகின்றது என்பதற்கான விளக்கத்தை தெளிவு படுத்தினார்.
அவர்கள் ஒரு நிபுணராக மட்டுமல்லாமல் பொதுவிடயங்களிலும், இனம் சார்ந்த சமூக மேம்பாட்டிலும்,நிர்வாகதுறையை   பொறுத்தமட்டில்  ஒத்திசைந்து செயலாற்றுவது இவரின் சிறப்பியல்பாகும்.
 மேலும் இவ்வாறான நிபுணர்களின் கருத்துரைகள், தெளிவுபடுத்தல்,கலந்துரையாடல் என்பன வைத்திய அத்தியட்சகர் Dr R முரளீஸ்வரன் அவர்களினால் “உற்பத்திதிறன்”  நிகழ்ச்சி நிரலில் கல்முனை ஆதாரவைத்தியசாலையின்  சுகாதார கல்விப்பிரிவினூடாக தொடராக நடாத்தப்பட்டு வருவது முக்கிய விடயமாகும்.
நிபுணர்கள் ,திறமையானவர்கள் ஆகியோரை இனங்கண்டு கல்முனை ஆதாரவைத்தியசாலையின் சுகாதார சேவையாளர்களின் சேவையின் திறனை மேம்படுத்தும் வகையில் இது நடைபெறுகின்றது எனலாம்.
இங்கு நடைபெறும் விரிவுரைகள் மிகப் பெறுமதிமிக்கது . அத்துடன் இவ்வாறான விரிவுரைகளை கேட்பதற்கு வெளியிடங்களில் கட்டணங்கள் செலுத்த வேண்டி ஏற்படும் .ஆனால் இங்கு எல்லாம் இலவசமாக நடாத்த வைத்திய அத்தியட்சகர் ஒழுங்கு   செய்துள்ளமை  பாராட்டதக்க விடயம். இவ் வைத்தியசாலையில் சேவையாளர்களின் திறனை வளர்க்கும் அளப்பெரிய சேவையில் இதுவும் ஒன்று என சுகாதார கல்விப்பிரிவு  பொறுப்பு தாதிய உத்தியோகஸ்தர்    K அழகரெத்தினம் கருத்து தெரிவித்தார்.