கல்முனை ஆதரா வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
வான் ஒன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ள.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த  துறைநீலாவணையினைச்சேர்ந்த தே.மகரிஷி என்பவா் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.