டெங்கு நோய் தாக்கத்தை தடுக்கும் முகமாக கல்முனைப்பிராந்திய சுகாதார பணிமனையில் நேற்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

நாட்டில் தொடர்ந்தும் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் டெங்கு நோய் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.

இதனைத் தவிர்க்கும் முகமாக வைத்தியர் எ.எல்.அலாவுதீன் தலைமையில் பல்வேறு திணைக்களங்களையும் இணைத்துக் குறித்த கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் டெங்குநோய் தடுப்புப்பிரிவு வைத்திய அதிகாரி ஆரிப் விளக்கமளித்துள்ளார்.

இதன்போது, கல்முனைப்பிராந்திய திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.