நாட்டில் பெற்றோல் தட்டுப்பாட்டு விவகாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் கல்முனை சாய்ந்தமருது, மாளிகைக்காடு பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றைய தினம் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதாக அப்பகுதி சாரதிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அப்பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லை என்ற அறிவித்தல் பலகை கடந்த ஒருவாரகாலமாக தொங்க விடப்பட்டுள்ளன.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக வாகனங்கள் வரிசையில் காத்திருக்கின்றன எனவும், வேறு சில நிலையங்களில் பெற்றோல் நிரப்புவதற்காக செல்லும் வாகனங்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும் அப்பகுதியில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

-காரைதீவு நிருபர் சகா