நடிகை ஜோதிகா 36 வயதினிலே, மகளிர் மட்டும் என்று பெண்கள் சம்பந்தப்பட்ட படமாகவே நடித்து அனைத்து இல்லத்தரசிகளின் மனதில் நிரந்தர இடம்பிடித்திருந்தார்.

அதையெல்லாம் சுக்குநூறாக்கியுள்ளது தற்போது வெளியாகியுள்ள நாச்சியார் பட டீசர்… ஆம் இப்படத்தில் ஜோதிகா ‘தே… பயலே’ என்ற கெட்ட வார்த்தையை உச்சரித்துள்ளார்.

குடும்பப் பெண்ணாக இருந்த ஜோதிகாவையே இப்படி கெட்ட வார்த்தை பேச வைத்துவிட்டாரே என்று இயக்குனர் பாலாவின் மேல் கடுப்பில் உள்ளனர் நெட்டிசன்கள்…

பெண்களின் முன்னேற்றத்திற்கான சினிமாவில் நடித்த ஜோதிகாவினை வாடி ராசாத்தி என்று கூப்பிட்டவர்களை தற்போது போடி ராசாத்தி என்று கூற வைத்துவிட்டீர்களே என்று பலரும் கூறி வருகின்றனர்.

வேறு சிலர் எது எப்படியோ… இயக்குனர் பாலா எதிர்பார்த்தது நடந்துவிட்டது என்றும் பரதேசி படத்தில் வேறு விதமாக பப்ளிசிட்டியை ஏற்படுத்தியது போன்று இப்படத்திற்கு நடந்துவிட்டதாக கூறியுள்ளனர்.