சம்மாந்துறை நகரின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த ஹிஜ்ராச்சந்தி சுற்றுவட்டத்தில்  அமைந்துள்ள மணிக்கூண்டுக்கோபுரம் கடந்தகாலத்தில் பலவித போஸ்ட்டர்களினாலும் பதாதைகளினாலும் அலங்கரிக்கப்பட்டு அல்லது மூடப்பட்டு காட்சியளித்தது.
ஆரம்ப காலத்தில் தனியே மக்களுக்கு நேரம் காட்டும் அதன் பணியை மாத்திரமே செய்துவந்தது. இதனை சம்மாந்துறை பிரதேசசபை நிருவகித்துவருகின்றது. இடையிடையே முக்கிய பிரதான நிகழ்ச்சிகள் பெருவிழாக்கள் பெருநாள் பண்டிகைகள்  என்றால் அவற்றின் போஸ்ட்டர்கள் ஓரிரு தினங்கள் கட்டப்பட்டிருக்கும். பின்பு அது கழற்றப்பட்டுவிடும்.
ஆனால் அண்மைக்காலமாக அந்தக்கோபுரத்தில் பலவித கட்சிக் கொடிகள் போஸ்டர்கள் அமைப்பாளர்களின் விளம்பர போஸ்ட்டர்கள் என பல கோணங்களிலும் இக்கோபுரம் நிரந்தரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதன்போது கட்சி முக்கியஸ்தர்களிடையே மனக்கசப்பும் உள்முரண்பாடுகளும் தோன்றியதுமுண்டு.
கடந்தவாரம் அதிலுள்ள மணிக்கூடும் இயங்காமலிருந்தது வேறுவிடயம். அது அடிக்கடி இவ்வாறு இயங்காமலிருப்பதாகப் பொதுமக்களும் சான்றுபகர்ந்தனர்.
இந்தநிலையில் நாற்சந்தியிலிருக்கக்கூடிய  இவ்வழகான உயர்ந்த கோபுரத்தில் பானர்கள் போஸ்ட்டர்கள் மறைத்து இருப்பது அசிங்கம் என பலரும் அபிப்பிராயம் வெளியிட்டு பிரதேசசபையினரிடமும் கூறியிருந்தனர்.
இறுதியில் நேற்றுமுன்தினம் சம்மாந்துறை நீதிமன்ற கட்டளையின் பேரில் பொலிசார் சிவில் அமைப்புகள் அந்த போஸ்ட்டர்களையும் பானர்களையும் அகற்றியுள்ளதாகத் தெரிகிறது. இதனை பெருந்தொகையானோர் சூழவிருந்து பார்த்துத்துக்கொண்டிருந்தனர்.
இங்கு போஸ்ட்டர்கள் ஒப்பட்டப்பட முன்பிருந்த கோபுரத்தின் படம்  ஒட்டப்பட்ட கோபுரத்தின் படம்  பானர்கள் நேற்றுமுன்தினம் மாலைப்பொழுதில் அகற்றப்படும்போது எடுத்த படம் தற்போதுள்ள கோபுரத்தின் படம் என்பன  இங்கு தரப்பட்டிருக்கின்றன.
படங்களும் தகவலும்: (காரைதீவு சகா)