ஊழல், மோசடிகளுக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்ளும்போது தமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின், சகல பதவிகளையும் கைவிட்டு, மக்களுடன் இணைந்து அந்தப் போராட்டத்தை முன்னெடுக்க தயாரென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளுக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்ளும்போது, தமக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

நிக்கவரட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தவறிழைத்த சுதந்திரக் கட்சி வேட்பாளர் 2015 ஆம் ஆண்டு தோல்வியுற்றார். இந்த நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியினர் அவ்வாறு தவறிழைத்தார்களாயின், அதனை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்