படைப்பாளி இலண்டன் ஜெசுதா யோ எழுதிய ஊயில் வலி என்ற கவிதை நூல் வெளியீடு இன்று மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள உயிரிழை அமைப்பின் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு கவிஞர் மாணிக்கம் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து சிறப்பித்ததுடன் முதலில் உயிரிழை அமைப்பின் வளாகத்தில் மரக்கன்றுகளை நாட்டிவைத்தார். வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த நூலினை வெளியிட்டு வைத்தார் .

இதன் பிரதியை யாழ் பாவாணன் மின்னூல் வெளியீட்டக இயக்குனா் யாழ்பாவாணன் பெற்றுக்கொண்டுள்ளார். இந்த நூலுக்கான வெளியீட்டுரையினை யாழ்ப்பாணத்தினை சேர்ந்த கவிஞர் சமரபாகு சீன உதயகுமார் நிகழ்தினார்.மேலும் சிறப்பு விருந்தினர்கள்,கவிஞர்கள் மற்றும் வருகைதந்தவர்களுக்கு நூலின் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன