இலங்கைக் கிரிக்கெட் அணியின் பிர­தான பயிற்­சி­யாளர் பத­வியை பொறுப்­பேற்க நால்வர் விருப்பம் தெரி­வித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அந்த நால்­வரில் இந்­திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக செயற்­பட்ட அனில் கும்­ளேவும் ஒருவர் என்று அறி­யக்­கி­டைக்­கின்­றது.

இலங்கைக் கிரிக்கெட் அணியின் தற்­போது இடைக்­கால தலைமைப் பயிற்­சி­யாளராக நிக்­போதஸ் செயற்­பட்டு வரு­கின்றார்.

இவர் இலங்கை அணியின் களத்­த­டுப்பு பயிற்­சி­யாளர். இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக இருந்த கிரஹம் போர்ட் இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து நிக் ­போதஸ் இடைக்­காலப் பயிற்­சி­யா­ள­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

இந்­நி­லையில் இவ்­வ­ருட இறு­திக்குள் இலங்­கைக்கு தலைமைப் பயிற்­சி­யாளர் நிய­மிக்­கப்­ப­டுவார் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் அறி­வித்­தது.

அதன்­படி பங்­க­ளாதேஷ் அணியின் தற்­போ­தைய பயிற்­சி­யா­ள­ராக செயற்­பட்­டு­வரும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்­திக ஹத்­து­ரு­சிங்க மற்றும் இந்­திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்­சி­யா­ள­ரு­மான அனில் கும்ளே ஆகியோர் விண்­ணப்­பித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதே­வேளை இவர்கள் முக்­கிய நிபந்­த­னை­க­ளையும் முன்வைத்தே தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

இன்னும் ஓரிரு வாரங்களில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.