‘நெவெஸ்கா லேடி’ என பெயர் சூட்டப்பட்ட எண்ணெய்த் தாங்கி கப்பலில் எடுத்துவரப்பட்ட எரிபொருளின் விநியோகப் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இன்று நள்ளிரவிற்குள் அனைத்து பகுதிகளுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என கனிய வள அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 42 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலை தாங்கி ‘நெவெஸ்கா லேடி’ வந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கப்பலில் இருந்த பெற்றோல் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது பரிசோதனையில் தரம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து விநியோகப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு குறையும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், பெற்றோல் விநியோகம் இன்று வழமைக்குத் திரும்பும் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.