(டினேஸ்)

2017 ஆண்டிற்கான மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளின்  அம்பாறை மாவட்டத்திற்கான மாவீரர் துயிலுமில்லத்தின் இறுதிக்கட்ட சிரமதானப்பணிகள்  (17)  அப்பிரதேச இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி சிரமதானப்பணியானது திருக்கோவில் தாண்டியடி தங்கவேலாயுதபுரம் போன்ற பகுதிகளின் உள்ள இளைஞர்கள் மீனவர் சங்கங்களின் உறுப்பினர்கள் முன்னாள் போராளிகள் மாவீரர்களது உறவினர்கள் அடங்களாக பலரும் கலந்துகொண்டனர்.

 நடைபெற்ற இறுதிக்கட்ட சிரமதான பணியுடன் துயிலுமில்ல பூமிக்கான சகல சிரமதானப்பணிகளும் நிறைவடைந்துள்ளதாகவும் இறுதி நாளான கார்த்திகை 27 திகதி அன்று நடைபெறவிருக்கும் ஈகைச்சுடரேற்றல் மலரஞ்சலி மற்றும் வருகைதரவுள்ள உறவுகளுக்கான பாதுகாப்புக்கள் குடிநீர் வசதிகள் உரிய முறையில் ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர்கள் கருத்துத் தெரிவித்தனர்.