அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பொது சத்திர சிகிச்சை நிபுணராக வைத்தியர் றிப்ஸான் ஜெமீல் நியமனம்!

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பொது சத்திர சிகிச்சை நிபுணராக வைத்தியர் றிப்ஸான் ஜெமீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது கடமையினை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம்.அசாத் முன்னிலையில் நேற்று கடமையினை பொறுப்பேற்றார்.
குருநாகல் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய நிலையிலேயே இடமாற்றம் பெற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டார்.
கடமையினை பொறுப்பேற்ற அவர் ஞாபகார்த்தமாக வைத்தியசாலையின் வளாகத்தில் மரக்கன்றொன்றினையும் நாட்டி வைத்தார்.
நிகழ்வில் கடந்த ஜந்து வருடங்களுக்கு மேலாக குறித்த வைத்தியசாலையில் பொது சத்திர சிகிச்சை நிபுணராக கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் செல்லும் பி.கே.ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.