கல்முனையை வதிவிடமாகக் கொண்ட அதிபர் சாமித்தம்பி சிதம்பரப்பிள்ளை அகில இலங்கை சமாதான நீதவானாக கல்முனை மாவட்டநீதிமன்றத்தில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

மத்திய முகாம் 11 ஆம் கிராமம் அகத்தியர் வித்தியாலயத்தின் அதிபரான இவர் மத்தியமுகாமைப் பிறப்பிடமாகக் கொண்டு றாணமடு இந்து மகாவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியைக் கற்று உயர்தரத்தினை மருதமுனை அல்மனார் மத்தியகல்லூரியில் கற்றுள்ள இவர் அதிபர் சேவை தரம் 2 ஐ சேர்ந்தவராவார்.

அத்தோடு பல பொது அமைப்புக்களில் முக்கிய பதவிகளில் இருந்து சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.