(காரைதீவு நிருபர் சகா)

விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியிலான விளையாட்டுப்போட்டியில் பங்கேற்பதற்காக சம்மாந்துறை அல் அர்சர் மகா வித்தியாலய மாணவன் எம்.ஜ.எம்.முஜீப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அகிலஇலங்கை ரீதியலான போட்டி இன்று(17) வெள்ளிக்கிழமை அம்பாந்தோட்டை மஹிந்தராஜபக்ச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மாணவன் முஜிப் பரீதிவட்டம் 200மீற்றர் ஓட்டம் மற்றும் உயரம்பாய்தல் நிகழ்ச்சிகளில் மாவட்டரீதியில் முதலிடம்பெற்று இன்றைய அகிலஇலங்கை ரீதியிலான போட்டிக்குத் தெரிவாகியிருக்கிறார்.

இவரைப்பயிற்றுவித்த விசேடதேவையுள்ள மாணவர் பிரிவு பொறுப்பாளர் ஆசிரியர் எம்.ஜ.எம்.றியாத் மற்றும் பாடசாலை அதிபரி ஏ.எல்.அப்துல்மஜீட் ஆகியோர் நேற்று மாணவனைப்பாராட்டி வழியனுப்பிவைத்தனர்.

சாதனை மாணவனுக்க சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.