த.தே.கூட்டமைப்பின் மிகுதிக்கால தேசியப்பட்டியல் ஆசனம் கல்முனைக்கு வழங்கப்பட வேண்டும்!

''

த.தே.கூட்டமைப்பின் மிகுதிக்கால தேசியப்பட்டியல் ஆசனம் கல்முனைக்கு வழங்கப்பட வேண்டும்! -கேதீஸ்- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள் இரண்டரை வருடங்களுக்கு முதற்கட்டமாக திருகோணமலைக்கும், முல்லைத்தீவுக்கும் துரைரெட்ணசிங்கம் சாந்நி சிறிஸ்கந்தராஜா ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்தன.முதல் இரண்டரை வருடகாலத்திற்கு பின்னர் ஏனைய மாவட்டங்களக்குவழங்குவதாக ஏற்கனவே கூறப்பட்டிருந்தரைமயும் குறிப்பிடத்தக்கதாகும். இரண்டரை வருட காலம் முடிவடைவதால் மிகுதியாக உள்ள வருடங்களில் ஒரு ஆசனத்தை கல்முனை தொகுதிக்கு வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை […]

கல்முனை 11 ஆம் வட்டாரத்தில் வீதி மின் விளக்குகள் பொருத்துதல் வீதி சீர்படுத்தல் பணிகள்

''

கல்முனை 11 ஆம் வட்டாரத்தில் வீதி மின் விளக்குகள் பொருத்துதல் வீதி சீர்படுத்தல் பணிகள்! கல்முனை 11 ஆம் தேர்தல் வட்டாரத்தில்  மின் விளக்குகள் இல்லாத வீதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுவருகிறது. கல்முனை மாநகரசபை உறுப்பினர் கென்றி மகேந்திரன் அவர்களின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டுவரும் இப்பணியுடன், கல்முனை வைத்தியசாலை குறுக்கு வீதி  நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுவதால் அவ்வீதியும் JCB  வாகனம் மூலம் சமப்படுத்தப்பட்டு சீராக்கப்பட்டது . மினி சுறாவளி காரணமாக அறுந்து […]

நற்பிட்டிமுனையில் மூன்று பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை!

''

நற்பிட்டிமுனையில் மூன்று பிள்ளைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை! நற்பிட்டிமுனை  கிராமத்தில் நேற்று (22) மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலய வீதியைச் சேர்ந்த குணரெட்ணம் சீதேவிப்பிள்ளை எனும் 46 வயதுடைய குறித்த பெண் நுண்கடன் மற்றும் வட்டிக்கடன் தொல்லையால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவருக்கு 17.15.11 வயதுகளில் மூன்று பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். குறித்த […]

கல்முனை எவரெடி கழகத்தினால் இரத்ததான முகாம்!

''

கல்முனை எவரெடி கழகத்தினால் இரத்ததான முகாம்! கல்முனை எவரெடி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் எதிர்வரும் 30.06.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கல்முனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை கட்டிடத்தில் காலை.8.30 மணி முதல் நடைபெறவுள்ள இந்த இரத்ததான முகாமில் பங்கு பற்றி இரத்ததானம் வழங்குமாறு எவரெடி கழகத்தினர் அழைக்கின்றனர்.

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (21) ஆரம்பம்!

''

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (21) ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் இன்று (21.06.2018) வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு திருக்கதவு திறத்தல் இரவுப் பூசையுடன் உற்வவம் ஆரம்பமாகிறது. தினமும் பகல் பூசை பி.ப ஒரு மணிக்கும்  இரவுப் பூசையும் இடம்பெறும். மூன்றாம் நாளான 23 ஆம் திகதி சனிக்கிழமை அம்மனின் வெளி வீதி கும்ப ஊர்வலம் பாண்டிருப்பின் வடக்கு […]

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை பழைய மாணவர் அமைப்பின் கனடா ஒன்று கூடல் 7ஆம் திகதி

''

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை பழைய மாணவர் அமைப்பின் கனடா ஒன்று கூடல் 7ஆம் திகதி! (சிந்துஜன்) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் புலம் பெயர் வாழ் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் எதிர்வரும் 07.07.2018 அன்று கனடாவில் நடைபெறவுள்ளது. பழைய மாணவர்களின் ஒன்று கூடலுடன் பழைய மாணவர்களின் குடும்பங்களும் கூடும் இந் நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று இராப்போசனமும் இடம்பெறும். இந் நிகழ்வில் கனடா மற்றும் […]

கல்முனை மினிச்சூறாவளியின் தாக்கத்தை பிரதேசசெயலர் லவநாதன் நேரில்சென்று பார்வை!

''

கல்முனை மினிச்சூறாவளியின் தாக்கத்தை பிரதேசசெயலர் லவநாதன் நேரில்சென்று பார்வை! நிவாரணம் நஸ்ட்டஈடு வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர்கள் வேண்டுகோள்!  (காரைதீவு  நிருபர் சகா)  கல்முனையில் நேற்றுமுன்தினம் (17) மாலை 5மணியளவில் வீசிய மினிச்சூறாவளியினால் ஏற்பட்ட சேதவிபரங்களைப்பார்வையிட கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் நேற்று(18) நேரில்சென்று பார்வையிட்டார். மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனும் ஏனைய த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களும் சென்றிருந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாக உலருணவு நிவாரணம் வழங்குவதோடு உரிய நஸ்ட்டஈட்டைப்பெற்றுத்தரவேண்டுமென […]

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாவும் நஷ்டஈடும் வழங்க முதல்வர் றகீப்பிடம் அரசாங்க அதிபர் உறுதி..!

''

மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபாவும் நஷ்டஈடும் வழங்க முதல்வர் றகீப்பிடம் அரசாங்க அதிபர் உறுதி..!  (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர பிரதேசங்களில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவியாக பத்தாயிரம் ரூபா பணத்தையும் உலர் உணவையும் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் சேத மதிப்பீட்டின் பின்னர் உரிய நஷ்டஈடு வழங்கப்படும் எனவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தூஷித்த வணசிங்க, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட […]

 கண்புரைநோய் சத்திரசிகிச்சை இலவசம்! லண்டன் டாக்டர் ராதா தர்மரெட்ணம் கல்முனையில் உரை!

''

 கண்புரைநோய் சத்திரசிகிச்சை இலவசம்! லண்டன் டாக்டர் ராதா தர்மரெட்ணம் கல்முனையில் உரை! (காரைதீ வு நிருபர் சகா) மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு மட்டுமன்றி கிழக்கில் பலபாகங்களிலுமுள்ள வறுமைக்கோட்டின்கீழ் வாழும் ஏழைமக்களுக்கு  கண்புரைநோய்(கற்றரக்ட்)சத்திரசிகிச்சையை இலவசமாக மேற்கொள்ள ஆவலாயிருக்கிறோம். இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண்புரைநோய் (கற்றரக்ட்) சத்திரசிகிச்சை முகாமை நிறைவுசெய்து உரையாற்றிய லண்டன் கண்வைத்தியநிபுணர் டாக்டர் ராதா தர்மரெட்ணம் தெரிவித்தார். மேற்படி கண்புரைநோய் சத்திரசிகிச்சை முகாம் (16) சனிக்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலையிலும், களுவாஞ்சிக்குடி […]

பாண்டிருப்பு ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் 29 ஆம் திகதி ஆரம்பம்!

''

பாண்டிருப்பு ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேகம் 29 ஆம் திகதி ஆரம்பம்! (இந்திரா) பாண்டிருப்பு ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேக கிரியைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகி மறு நாள் (30.06.2018) சனிக்கிழமை எண்ணைக்காப்பு சாத்துதல் இடம்பெறும். 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் ஆரம்பமாகி 10 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 11. 07.2018 புதன் கிழமை பாற்குடப்பவனியை தொடர்டந்து சங்காபிஷேகம் இடம்பெறவுள்ளது. ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் […]