இன்று கிரான்குளத்தில் விவேகானந்த பூங்காவிற்கான அடிக்கல்நடுவிழா!

''

இன்று கிரான்குளத்தில் விவேகானந்த பூங்காவிற்கான அடிக்கல்நடுவிழா! (காரைதீவு  நிருபர் சகா) மட்டு. கிரான்குளத்தில் விவேகாநந்த பூங்காவிற்கான அடிக்கல்நடுவிழா இன்று(25)திங்கட்கிழமை காலை 11மணிக்கு சமுகநலன்புரி அமைப்பின் தலைவர்  வே.பாஸ்கரன் தலைமையில் நடைபெறவுள்ளது. ஆன்மீக அதிதியாக இராமகிருஸ்மிசனின் மட்டு.மாநிலத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபுபிரேமானந்தா ஜீ கலந்துகொண்டு அடிக்கல்நடவுள்ளார். பிரதமஅதிதியாக  மண்முனைப்பற்று பிரதேசசெயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் கலந்துகொள்வார். மேலும்பல கௌரவ சிறப்பு அதிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். கிரான்குளத்தில் அமையவுள்ள விவேகானந்த பூங்காவினுள் 25அடி உயரமான விவேகானந்த […]

காரைதீவில் கதிர்காம பாதயாத்திரீகர்கள்!

''

 காரைதீவில் கதிர்காம பாதயாத்திரீகர்கள்! (காரைதீவு  நிருபர் சகா) யாழ்ப்பாணத்திலிருந்து கடந்தமே மாதம் 17ஆம் திகதி ஆரம்பித்த கதிர்காமம் நோக்கிச்செல்லும் வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரைக்குழுவினர் 38 நாட்களின் பின்னர் நேற்று  (24) காரைதீவில் தங்கினர். நேற்றுமுற்பகல் (23) காரைதீவுக்கு வருகை தந்த பாதயாத்திரைக்குழுவினருக்கு பலத்தவரவேற்பு அளிக்கப்பட்டது.காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில்  வேல்சாமி குழுவினரை வரவேற்றார். முருகபக்தர் எஸ்.தேவதாஸ் திருவமுது படைத்தார்.அன்றிரவு காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனாலயத்தில் தங்கினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை(24) சித்ததானைக்குட்டி சுவாமி […]

த.தே.கூ எம்.பிக்கள் இருவரிடம் ராஜனாமா கடிதங்கள் பெறப்படவுள்ளது!

''

த.தே.கூ எம்.பிக்கள் இருவரிடம் ராஜனாமா கடிதங்கள் பெறப்படவுள்ளது! தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா , துரைரட்ணசிங்கம் ஆகியோரிடம் தமது எம் பி பதவியை ராஜினாமா செய்யும் கடிதங்களை பெறுமாறு தமிழரசு கட்சியின் செயலாளருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த பாராளுமன்றத்தேர்தலின் போது கிடைத்த போனஸ் ஆசனங்களை அரைவாசி காலத்துக்கு பகிருவது என்ற அடிப்படையிலேயே இவ்விருவருக்கும் […]

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் “நீதியரசர் பேசுகிறார்” என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

''

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் “நீதியரசர் பேசுகிறார்” என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் கலந்து கொண்டிருந்தார். இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர். வட மாகாண முதலமைச்சர் இதுவரையில் ஆற்றய […]

பரீட்சைக்கட்டணங்கள், பொலிஸ் தண்டப்பணங்கள் பிரதேச செயலகங்களில் தற்போது செலுத்தலாம்!

''

பரீட்சைக்கட்டணங்கள் பொலிஸ் தண்டப்பணங்கள் பிரதேச செயலகங்களில் தற்போது செலுத்தலாம்! தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பொலிஸ் தண்டப் பணம் மற்றும் பரீட்சை கட்டணங்கள் என்பன அனைத்து பிரதேச செயலகங்களிலும் செலுத்தக் கூடிய வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீதிப் போக்குவரத்திற்கான பொலிஸ் தண்டப்பணங்கள் 14 நாட்களுக்கு முன்னர் கட்ட வேண்டியவர்கள் 14 நாட்கள் கடந்த பின்பு வீண் சிரமங்களை தவிர்க்கும் வகையில் பிரதேச செயலகங்களிலேயே தண்டப்பணங்களை செலுத்தி பற்றுச்சிட்டைப் பெற்றுக்ககொள்ள முடியும்.

கத்திக்குத்தை தடுக்க முயன்ற முன்னாள் போராளி பலி; பொத்துவிலில் சம்பவம்!

''

மகளை கத்தியால் குத்தமுனைந்த தந்தையை தடுக்கச்சென்ற முன்னாள் போராளி பலி ! (டினேஸ்) தந்தை ஒருவர் தன் மகளைக் கத்தியால் குத்த முற்பட்டபோது அதனைத் தடுக்க முனைந்த முன்னாள் போராளி கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் பொத்துவில், கோமாரி ரொட்டையைச் சேர்ந்த 55 வயதுடைய சரவணமுத்து நாகராசா (வம்பு சிவராசா) என்றழைக்கப்படும் முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்பப் பிரச்சனை காரணமாக தந்தையார் ஒருவர் தன் மகளான சிறுமியைக் கத்தியால் […]

இன்றும் நாளையும் திருக்கோவிலில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு!

''

இன்றும் நாளையும் திருக்கோவிலில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு! (காரைதீவு  நிருபர் சகா)  கிழக்கிலங்கையின் முதலாவது திருப்படைக் கோவிலான திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகத்தையொட்டிய எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று(23) சனிக்கிழமையும் நாளை(24) ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். இவ் ஆலயமானது 15வருடங்களுக்குப்பிறகு எதிர்வரும் (25) திங்கட்கிழமை தனது குடமுழுக்கினைக் காணுகின்றது.  25ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.35மணி முதல் 10.25மணி  வரையான சுபவேளையில் கும்பாபிசேக பிரதமகுரு சிவாகமவித்தியாபூசணம்  விபுலமணி. சிவஸ்ரீ.சண்முகமகேஸ்வரக்குருக்கள் […]

கதிர்காம பாதயாத்திரை தங்கு தடையின்றி நடைபெறும்! 

''

கதிர்காம பாதயாத்திரை தங்கு தடையின்றி நடைபெறும்!  அம்பாறை மாவட்டத்தின்  அக்கரைப்பற்று ஆலையடிவேம்பில் இடம்பெற்றுவரும் அசாதாரண சூழ் நிலையினால் கதிர்காமத்துக்கு நடந்து செல்லும் பக்த அடியார்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பாதுகாப்பான முறையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்ட்டுள்ளது. சிவநெறி அறப்பணி மன்றத்தின் அம்பாறை மாவட்டத்தின் தலைவர் சைவவித்தகர்.திரு.யோ.கஜேந்திரா மற்றும் பிரதிச் செயலாளர் திரு.அ.நிதான்சன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஆலோசகரும்,இந்துகுருமார் அமைப்பின் தலைவருமான வணத்துக்குரிய.சிவஸ்ரீ.வைத்தீஸ்வரன் குருக்கள் அவர்களின் […]

இன்றுநடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தினை ஒத்திவைக்கவேண்டும்! பட்டிருப்பு வலயக்கிளை

''

இன்றுநடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தினை ஒத்திவைக்கவேண்டும்! இன்றேல் நாம் 800பேரும் விலகவேண்டிநேரிடும்! 4லட்சருபாவுக்கு நடந்ததென்ன? பட்டிருப்பு வலயக்கிளை இத.ஆ.சங்க பொதுச்செயலருக்கு அவசரக்கடிதம்! இன்று (22) வெள்ளியன்று முறையற்றவிதத்தில் திருமலையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தினை ஒத்திவைக்கவேண்டும். இன்றேல் நாம் 800பேரும் விலகவேண்டிநேரிடும். இவ்வாறு இலங்கைத்தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பட்டிருப்பு வலயக்கிளை இ.த.ஆ.சங்க பொதுச் செயலருக்கு அவசரக்கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. பட்டிருப்புவலயக்கக்கிளைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை பொதுச்செயலாளருக்கும் தலைவர் உள்ளிட்ட தாய்ச்சங்க உறுப்பினர்களுக்கு கிளை அனுப்பிவைத்துள்ளது. எமக்கு முன்னாள் பொருளாளரினால் வழங்கப்பட்ட […]

கிழக்கு மாகாண சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் வட மாகாண முதயமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனை சந்திப்பு!

''

கிழக்கு மாகாண சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் வட மாகாண முதயமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனை சந்திப்பு! (டினேஸ்) கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரச்சனைகள் மற்றும் கிழக்கின் அபிவிருத்திகள் தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கும் வகையில் கிழக்கு மாகாண சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்  வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சீ.வி விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பின் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரீ.வசந்தராஜா முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் என்.கிருஸ்ணபிள்ளை கல்முனை மாநகர […]