இலங்கையின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சீனா 10.6 மில்லியன்  லீட்டர் டீசலை கொடையாக வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரக தகவல்படி, இந்த டீசல் தொகையை ஏற்றிய கப்பல் 2022 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில், சீன அரசாங்கம் கடந்த 5 மாதங்களில் அவசர மனிதாபிமான நன்கொடைகளாக 3 பில்லியன் ரூபா பெறுமதியான 5,500 மெட்ரிக் தொன் அரிசி மற்றும் அத்தியாவசிய மருந்துகளை தீவு நாட்டிற்கு வழங்கியுள்ளது.

அத்துடன் இலங்கையின் சர்வதேச நாணய நிதிய திட்டத்துக்கும் ஒத்துழைப்பதாக அறிவித்துள்ளது.

You missed