மண்டூர் மலரும் மொட்டுக்கள் சிறுவர் அபிவிருத்தி மையம் மெதடிஸ்த ஆலயத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதர வைத்தியசாலையினால் மாபெரும் நடமாடும் வைத்திய முகாம் நேற்று (13.02.2023) இந்நிகழ்வானது மெதடித்த ஆலயத்தின் போதகர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதர வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr இரா. முரளீஸ்வரன் அவர்களுடன் பிரதிப் பணிப்பாளர் Dr ஜெ.மதன் அவர்களும் வெல்லாவெளி போலீஸ் பொறுப்பதிகாரி பிரசாத் சில்வா மற்றும் கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்,தொண்டர் அமைப்பினர்கள் உள்ளிட்ட குழுவினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது இப்பிரதேசத்தை சேர்ந்த சுமார் 250 சிறுவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் இனங்காணப்பட்ட தொற்றா நோய் நோயாளர்களுக்கும் நோய் நிலை பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் சுகாதார போதனைகள் போசாக்கு சம்பந்தமான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டன.

இதன் போது போசாக்கு குறையுடன் காணப்பட்ட சுமார் 170 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மாருக்கு நவபோச சத்துமாவும் வழங்கப்பட்டது.