முனைத்தீவு சக்தி உதவும் கரங்கள் அமைப்பால் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரங்கள் நடப்பட்டன!

சர்வதேச சுற்றாடால் தினத்தினை முன்னிட்டு ‘பசுமையான சூழலினை உருவாக்குவோம் எமது சூழலினை நாமே பாதுகாப்போம்’ எனும் தொனிபொருளில் முனைத்தீவு சக்தி உதவும் கரங்கள் அமைப்பினால் வீதியோர மரநடுகை செயற்பாடாக   09-06-2018 அன்று உதவும் கரங்கள் அமைப்பின் இணைப்பளர் திரு.தே.புவிதாஸ் அவர்களின் தலைமையில் முனைத்தீவு ஆயுள்வேத வைத்தியசாலை முன்றலில் உள்ள வீதியோரங்களில் மரங்கள்  நடப்பட்டன.

இந் நிகழ்வில் போரதீவுபற்று பிரதேச செயளாளர் செல்வி இ.ராகுலநாயகி, கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சின் உதவி பணிப்பாளர் திரு.எஸ்.தணிகசீலன் சமூகவியல் மற்றும் சூழலியல் தொடர்பான ஆய்வாளரும் வளவாரரும் ஆகிய திரு.எஸ்.ரமேஸ்வரன், மற்றும் முனைத்தீவு கிராம சேவை உத்தியோகஸ்தர் திரு.ஆர் .பிரதீபன் அவர்களும் மற்றும் முனைத்தீவு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

‘இச்செயற்பாட்டின் ஊடாக பிரதேசத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் பங்களிப்பு இது போன்ற செயற்பாடுகளில் ஊக்குவிக்கப்படுவதன் மூலம் எமது சுற்றுச் சூழலுக்கு முழுவதுமான பங்களிப்பினை நல்கவேண்டும்’ என பிரதேச செயலாளர் கருத்துத் தெரிவித்தார்.

‘இன்று உலகில் காணப்படும் காலநிலை மாற்றம் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்தாமல் இல்லை, வருமுன் காப்போம் என்ற கருத்தை முன்னிறுத்தி இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வினையும் இந்த திட்டத்தின் கீழ் பொறுப்புணர்வையும் நாம் ஏற்படுத்தி இருக்கின்றோம்.

யுத்தம் அனர்த்தம் காரணமாக நாம் இழந்த மரங்களையும் சூழலையும் கட்டிக்காக்கும் தருணத்தில் இவ்வாறான செயற்திட்டங்கள் மூலம் ஏனைய இளைஞர்களும் இவ்வாறான ஆளுக்கொரு மரம் வளர்க்கும் திட்டத்தினை மேற்கொள்வதனை ஊக்குவிப்பதற்கும் இப்போன்ற செயற்பாடுகள் உதாரணமாக இருக்கவேண்டும்’ என தணிகசீலன் அவர்கள் கூறினார்

ரமேஸ்வரன் கூறுகையில் ‘நமது மண்வளத்தினை கட்டிக்காக்கும் ஒரு பாரம்பரிய இயற்கைவழி மரம் நடுதல் எனவும் அவற்றை சிறு சிறு அளவிலாவது எமது பிரதேசங்களில் நட்டு உருவாக்கவேண்டும்’ என்றார்.