பெரியநீலாவணையில் ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை  ஆரம்பித்து வைப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தமிழ் கிராமமான  நீலாவணையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தில் நேற்று 10.06.2018  ஞாயிற்றுக்கிழமை  ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை   செல்வி.ர.ஜெனிற்றாவின் தலைமையிலும் முயற்சியிலும் நல்லுள்ளங்களின் ஒத்துழைப்பிலும் ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறி பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது

இவ் விழாவின் ஆசியினை நல்க சிவஸ்ரீ விஜயவர்ம குருக்கள் மற்றும்  பிரதம அதிதியாக கல்முனை  மாநகரசபை உறுப்பினர் .சோ.குபேரன்  அவர்களும், மேலும் அதிதிகளாக ஓய்வு நிலை கோட்டகல்வி பணிப்பாளர் திரு. ஜெகநாதன், கிராம சேவை உத்தியோகத்தரான  திரு. உதயகுமார் ஊடகவியலாளர் இந்துபிரச்சாரகர் அகரம்.திரு.செ.துஷ்யந்தன்,சித்தி விநாயகர் ஆலய தலைவர் திரு.எஸ்.கிருஸ்ணராஜா, சிவநெறி அறப்பணி மன்ற உப செயலாளர்  அ.நிதான்சன்,என பலர் கலந்து கொண்டனர்.

அறநெறி வாரத்தினை முன்னிட்டு அறநெறி  கொடி வழங்கப்பட்டது அதனை பிரதம அதிதி சோ.குபேரன் அவர்கள் பெற்று கொண்டார்.

இக் கிராமத்தில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு வீட்டுத் திட்டத்துக்கு நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த அறநெறி பாடசாலைக்கான தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளமையையிட்டு  இக்குடியிருப்பு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

(நிதான்)