கல்முனை சைனிங்கின் கிறிக்கட் சுற்றுப்போட்டியில் பாண்டிருப்பு விளையாட்டுக்கழகம் (PSC) வெற்றி!

கல்முனை சைனிங் விளையாட்டுக்கழகம் நடாத்திய கிறிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் பாண்டிருப்பு விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது. 32 கழககங்கள் போட்டியிட்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இறுதிப் பாண்டிருப்பு விளையாட்டுக்கழகமும் கல்லாறு திருவள்ளுவர் விளையாட்டுக்கழகமும் தெரிவாகி போட்டியிட்டிருந்தன.

இச்சுற்றுப் போட்டியின் தொடராட்டநாயகனாக றிஸ்வன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.அத்துடன் வெற்றிக்கிண்த்திற்கான போட்டியில்  சுந்தர் றிஸ்வன் ஆகியோர் இணைப்பாட்டமாக 64 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர்.

கல்முனை சைனிங் விளையாட்டு மைதானத்தில் நேற்று (3) நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் அதிதிகளாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கிராம சேவை உத்தியோகத்தர் மனோகரன் சரவனாஸ் நகை மாளிகை உரிமையாளர் லதன் மீனவர் சங்கத் தலைவர் முரளி சைனிங் விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர் ராஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.