சுப்பர் ஸ்டாரின் கல்முனை பிரீமியர் லீக் (KPL) ஆரம்பமாகியது!

நற்பிட்டிமுனை சுப்பர் ஸ்டார் இளைஞர் கழகம் நடாத்தும் கல்முனை பிறிமியர் லீக் (KPL) கிறிக்கட் சுற்றுப்போட்டி நேற்று (29)  ஆரம்பமாகியது. சுற்றுப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு 29.05.2018 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு உவெஸ்லி உயர்தரப்பாடசாலை மைததனத்தில் நடைபெற்றது.

எட்டு அணிகள் பங்குபற்றும் இச்சுற்றுப் போட்டி  நேற்று (29) ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று  இறுதிப் போட்டி அடுத்த மாதம் 24.06.2018 அன்று நடைபெறும்.

ஆரம்ப நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை மாநகரசபை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ்,  இகல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை அதிபர் பிரபாகரன், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், கே. செல்வராஜ், மாணவர் மீட்பு பேரவை தலைவர் பொறியியலாளர் கணேஸ், ஜீ.கே சினி மெக்கஸ் உரிமையாளர் ராஜேஸ்வரன், சரவணாஸ் உரிமையாளர் லதன்  ஆகியோர்  கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.