சிறந்த கருத்துடன் வெளியாகியுள்ள அன்னமலை ருவுதரனின் ”பசுமைக்காதல்’ குறும்படம்  (VIDEO)

அன்னமலை   கிராமத்தை சேர்ந்த சமுகப்பணி பட்ட மாணவன் ருவுதரன் சந்திரப்பிள்ளையின்  இயக்கத்தில் உருவாகிய ”பசுமைக்காதல்” குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது.

சமுகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள இக்குறும்படம்   பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. .இது இவரின் இயக்கத்தில் உருவான ஆறாவது குறும்படம் ஆகும். இதில் இலங்கையின் பிரபலமிக்க பிரகாஸ் சஞ்ஜேய் போன்ற நடிகர்கள் நடித்திருப்பது சிறப்பம்சமாகும்.

இக் குறும்படத்திற்கு  அஜய் ரேமினாத் ஔிப்பதிவினையும் யாசிர் நிசார் படத்தொகுப்பினையும் மேற்கொண்டுள்ளனர் மேலும் இதற்கு உமப்பிரியன் இசையமைத்துள்ளார்.

இக்குறும்படத்தை  அம்மா கிரியேசன் தயாரித்துள்ளது இதனை ஜீன் மாத சுற்றாடல் தினத்தில் வெளியிட்டு   இப்படத்தின் மூலம்   சுற்றாடலுக்கான சிறந்த  கருத்தினை வழங்கியுள்ளார் இயக்குனர் ருவுதரன்.