கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு றோற்றரி கழகத்தால் தன்னியக்க குருதி  பரிசோதனை இயந்திரம் அன்பளிப்பு

பல் துறை பரிமாணங்களில் வளர்ச்சி கண்டு வரும் கல்முனை ஆதாரவைத்தியசாலையின்   அதி நவீன இயந்திரங்கள் கொண்டு இயங்கி வரும் ஆய்வு கூடத்தை மேலும்   மேம்படுத்தும் முகமாக  றோற்றரி கழகத்தால் அதி நவீன தன்னியக்க குருதி பரிசோதனை இயந்தரம் அன்னளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

வைத்தியட்சகர், வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க, நேற்று (06) றோற்றரி கழகம், மத்திய நகரம், கொழும்பு.  தலைவரினால், 23 இலட்சங்கள் பெறுமதிமிக்க இவ்வியந்திரம்  வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்களின் மூலம் ஆய்வு கூட பொறுப்பு தொழில்நுட்பவியலாளர்  சு.அகில்ராஜ் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்மூலம் இரத்த மாதிரிகளின் பெறுபேறுகள் துரிதமாகவும், வினைத்திறனுடனும் பெறமுடியும் என்பதனால்; இவ் வைத்தியசாலையின் சேவைநாடிகள் இன்னும் நன்மைகள் பெறும் வாய்புள்ளது.