கல்முனை ஆதாரவைத்தியசாலையும்,  பொலிஸ் நிலையமும் இணைந்த நடாத்திய இலவச மருத்துவ முகாம்!

கல்முனை பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி C I ஜயநந்தி அவர்களின் தலைமைத்துவத்தில், நடமாடும் பொலிஸ் சேவை, பொலிஸ் காவலரண், கல்முனை பொலிஸ் பரிசோதகர் S.சுகுமார் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க,  இன்று (07)  நடமாடும் இலவச வைத்திய முகாம்  நடாத்தப்பட்டுள்ளது.

கல்முனை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இரா முரளீஸ்வரன் அவர்களின் அனுமதியில்; உதவி வைத்திய அத்தியட்சகரும், திட்டமிடல் வைத்திய பொறுப்பதிகாரியுமான,  வைத்தியர் S இராஜேந்திரன் அவர்களினால் இவ் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வைத்திய முகாமில் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் N.றமேஸ் , அதிதீவிர சிகிச்சைப் பிரிவு வைத்திய அதிகாரி வைத்தியர் B.சுரேஸ்குமார் ஆகியோர் உள்ளிட்ட வைத்திய குழுவினர் கடமையாற்றியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில், கல்முனை  தலைமை போலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி C I ஜயநந்தி அவர்களின் விஷேட குழுவினர் வருகைதந்து சிறப்பித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நடைபெறும் இவ் அரச ஒழுங்கு விதிமுறைக்கு அமைவான, இந் நிகழ்ச்சி திட்டத்தில் சிறந்த சேவையாற்றிக்கொண்டிருக்கும் கல்முனை ஆதாரவைத்தியசாலையும், கல்முனை பொலிஸ் நிலையமும் ஒன்றிணைந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதுபற்றி பொலிஸ் பரிசோதகர் S சுகுமார் கருத்து கூறுகையில் “பொலிஸ் சேவைக்கும் மக்களுக்குமான ; சேவை ஒற்றுமையை வலுவூட்டும் வகையில் இம் முகாம் நாடளாவிய ரீதியில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எமது  நிலையத்திற்கு கல்முனை ஆதாரவைத்தியசாலையின் பங்களிப்பு அளப்பெரியது. மேலும் எமது இணைந்த சேவை மக்களுக்கு இன்னும் பல நன்மைகளை பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும்” எனவும் கூறினார்.

பல மக்கள் இச் சேவைக்கு சமூகமளித்து இலவச வைத்திய சேவையில் பயன்பெற்றனர்.