ஒருவருக்கு ஒருவர் பயண அழைப்பு வட கொரிய-அமெரிக்க தலைவர்கள்…..

அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்திய போது, அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளுமாறு விடுத்த டிரம்பின் அழைப்பை வட கொரிய அதியுயர் தலைவர் கிம் ஜுங் உன் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், வட கொரியாவில் பயணம் மேற்கொள்ளுமாறு ஜிம் ஜுங் உன் விடுத்த பயண அழைப்பை டிரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் கொரிய மத்திய செய்தி நிறுவனம் 13ஆம் நாள் செய்தியில் குறிப்பிட்டது.

சிங்கப்பூர் பேச்சுவார்த்தையில் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களை இரு தரப்புகளும் செயலாக்க நடவடிக்கைகளைக் கூடிய விரைவில் மேற்கொள்ள வேண்டும் எனவும், எதிர் தரப்பைத் தீவிரமாக்கும் அல்லது பகைமை தன்மை கொண்ட ராணுவ நடவடிக்கைகளை இரு தரப்புகளும் முதலில் நிறுத்த வேண்டும் எனவும் கிம் ஜுங் உன் விருப்பம் தெரிவித்துள்ளதாக இச்செய்தியில் கூறப்பட்டது