இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டயா முத்தரப்பு ரிக்கெட் போட்டி. இந்திய அணியை வீழ்த்தியது இலங்கை அணி..

இலங்கையின் 70-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியா, இலங்கை, பங்காளதேஷ்
ஆகிய அணிகள் இடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

நேற்று தொடங்கிய இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் மோதின.

நாட்டில் அசாதாரண சூழ்நிலை யைக் கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இப் போட்டி நடை பெற்றது குறிப்பிடத்தக்கது
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த இந்தியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரரும்,அணியின் தலைவருமான ரோகித் சர்மா (0) பந்தை தூக்கியடித்து பிடி கொடுத்து வெளியேறினார் .அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா ஒரு ஓட்டமெடுத்து வெளியேறினார் .
இதன் பின்னர் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும், மனிஷ் பாண்டேவும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறிது நேர மந்தமான பேட்டிங்குக்கு பிறகு ஆட்டம் ஓரளவு சூடுபிடித்தது. நுவான் பிரதீப்பின் பந்து வீச்சில் தவான் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டினார். 12 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை தொட்டது. மனிஷ் பாண்டே தனது பங்குக்கு 37 ரன்கள் (35 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் வெளியேறினார். மறுமுனையில் சதத்தை நோக்கி வீறுநடை போட்ட தவான் துரதிர்ஷ்டவசமாக 90 ஓட்டமெடுத்து ( 49 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) கேட்ச் ஆகிப்போனார். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தவானின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இறுதி கட்டத்தில் ரிஷாப் பான்ட் (23 ரன்), தினேஷ் கார்த்திக் (13 ரன், 6 பந்து, 2 பவுண்டரி, நாட்-அவுட்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளிக்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்கள் சேர்த்தது.

பின்னர் 175 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் குசல் மென்டிஸ் 11 ரன்களில், வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் வீழ்ந்தார். 2-வது விக்கெட்டுக்கு புகுந்த குசல் பெரேரா, இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார். குறிப்பாக ஷர்துல் தாகூர் வீசிய ஒரு ஓவரில் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டினார். வகையில் மேலதிகமாக ஒன்றும் சேர்ந்ததால் அந்த ஓவரில் மட்டும் 27 ஓட்டங்கள்அவர்களுக்கு கிட்டியது.

தொடர்ந்து அதிரடி நீடித்ததால் ‘அதிரடி ஆட்டத்தில் முதல் 6 ஓவர்களில் மட்டும் இலங்கை 75 ஓட்டங்கள் சேகரித்தது. அதிரடி ஆடடத்தில் இலங்கை திரட்டிய அதிகபட்சஓட்டங்கள் இது தான். இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ‘தண்ணி’ காட்டிய குசல் பெரேரா 66 ரன்களில் (37 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சில் பிடி கொடுத்து ஆடடமிழந்தார். இதன் பின்னர் அந்த அணி மிடில் ஓவர்களில் சில விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும், தடையின்றி வெற்றிப்பாதையை அடைந்தது.

இலங்கை அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷனகா 15 ஓட்டங்கள்ளுடனும், திசரா பெரேரா 22 ஓட்டங்களுடனும் (10 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 7 தோல்விக்கு பிறகு இலங்கை பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

இந்த தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் நாளை சந்திக்கின்றன.