இன்னும் சில மணி நேரத்தில் ரஸ்யாவில் கோலாகலமாக தொடங்க இருக்கும் 21 ஆவது உலகக் கோப்பை போட்டி…

கால்பந்து வீரர்கள் எதிர்பார்க்கும் 21 ஆவது உலக கோப்பை போட்டி இன்னும் சில மணி நேரத்தில் ரஸ்யாவில் தொடங்க இருக்கிறது . மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவின் 11 நகரங்களில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.பிபா உலக கோப்பை போட்டிக்காக ரஷ்யாவின் முக்கிய நகரங்கள் அனைத்தும் விழாக்கோலமாக காட்சியளிக்கின்றன. மாஸ்கோ நகரில் ஒவ்வொரு போட்டியையும் ராட்சத திரையில் கண்டு களிக்க பிரத்யேகமான அரங்கு நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழாவில் முன்னணி வீரர்கள், ரஷ்ய கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகள், பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

உலக கோப்பையின்போது ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு வெள்ளோட்டமாக அமைந்த இந்த நிகழ்ச்சிக்கு 25,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டது போட்டி அமைப்பாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாஸ்கோவின் லஸ்னிகி ஸ்டேடியத்தில் நாளை ரஷ்யா – சவுதி அரேபியா அணிகளிடையே நடக்க உள்ள தொடக்க லீக் ஆட்டத்தின்போது இங்கு ரசிகர்கள் அலைகடலெனத் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போட்டியை காண வரும் கருப்பு இன ரசிகர்களுக்காக நிறவெறி எதிர்ப்பு படையை ஐரோப்பாவில் இருந்து ரஷ்யா வரவழைத்துள்ளது. இதனை கருப்பு இனத்தைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.
நிறவெறி பிரச்சனைகள் மைதானத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் உருவாகாமல் இருக்க இந்த படையானது தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள உள்ளது. இதனிடையே 2026ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாட்டின் பெயர் இன்று மாஸ்கோவில் அறிவிக்கப்பட உள்ளது. அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் ஒரு நாடுகள் தேர்வாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ற்போது ரஷ்யாவில் நடக்கும் உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. 2026ல் நடக்க உள்ள உலகக் கோப்பையில் 48 நாடுகள் பங்கேற்க உள்ளன. அதற்கேற்ற மைதான வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டன. துவக்கம் முதலே வடஅமெரிக்காவே முன்னிலையில் இருந்தது. இன்று நடந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ இணைந்து 2026 உலகக் கோப்பையை நடத்துவதற்கு 134 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. மொராக்கோவுக்கு 65 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இதற்கு முன் 1970 மற்றும் 1986ல் வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் உலகக் கோப்பை நடந்துள்ளது. அமெரிக்காவில் 1994ல் நடந்துள்ளது. இதற்கு முன் நடந்த உலகக் கோப்பைகளை நடத்திய நாடுகள்:

1930 – உருகுவே

1934 – இத்தாலி

1938 – பிரான்ஸ்

1942 – உலகப் போரால் ரத்து

1946 – உலகப் போரால் ரத்து

1950 – பிரேசில்

1954 – சுவிட்சர்லாந்து

1958 – ஸ்வீடன்

1962 – சிலி

1966 – இங்கிலாந்து

1970 – மெக்சிகோ

1974 – மேற்கு ஜெர்மனி

1978 – அர்ஜென்டீனா

1982 – ஸ்பெயின்

1986 – மெக்சிகோ

1990 – இத்தாலி

1994 – அமெரிக்கா

1998 – பிரான்ஸ்

2002 – தென்கொரியா-ஜப்பான்

2006 – ஜெர்மனி

2010 – தென்னாப்பிரிக்கா

2014 – பிரேசில்

2018 – ரஷ்யா

2022 – கத்தார்